Mrpupapd; nra;jpfs;

ஆசிரி சென்ரலின் மூளை மற்றும் முள்ளந்தண்டு நிலையம் 10000 சத்திர சிகிச்சைக

ஆசிரி சென்ரல் ஹொஸ்பிட்டலின் “மூளை மற்றும் முள்ளந்தண்டு நிலையம்” (Brain and Spine Centre) 10,000 சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறுவப்பட்டது முதல் நரம்பியல் சத்திரசிகிச்சை மேற்கொண்டு வருகின்றதுடன்இ தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையமாக திகழ்கின்றது.

நாட்டின் சிறந்த தனியார் துறை நரம்பியல் சத்திரசிகிச்சை சேவைகளை வழங்கும் நிலையமாக திகழ்வதுடன்இ உலகத்தரம் வாய்ந்த வசதிகளையூம் ஆசிரி மூளை மற்றும் முள்ளந்தண்டு நிலையம் தன்னகத்தே கொண்டுள்ளது.

சிரேஷ்ட நரம்பியல் வைத்திய ஆலோசகரான வைத்தியர். சுனில் பெரேரா இந்நிலையத்தின் தலைமை வைத்தியராக செயலாற்றுவதுடன், epilepsy சத்திரசிகிச்சையை மேற்கொண்ட முதலாவது தனியார் வைத்தியசாலையாக திகழ்வதுடன்இ பல்வேறு சிகிச்சை சார் சாதனைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டில் Pயசமiளெழn நோய்க்கான (Deep Brain Stimulation) சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் ஒNரு வைத்தியசாலையாகவூம் இது திகழ்கின்றது.

மருத்துவ உலகின் நவீன சாதனங்களை இலங்கையில் வழங்கும் வகையில், Neuro-navigation  மற்றும் Intraoperative Monitoring  கட்டமைப்பொன்றை இந்த நிலையம் முதலில் நிறுவியிருந்ததுடன்இ இவை உயர் தொழில்நுட்பத்தின் கொண்டதாகவூம்இ சிறந்த சத்திரசிகிச்சைசார் பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்கான பாதுகாப்பையூம் வினைத்திறனையூம் வழங்குவதாக அமைந்துள்ளன.

வைத்தியர் பெரேரா குறிப்பிடுகையில்இ “தற்போது நாம் உயர் தரம் வாய்ந்த நரம்பியல் சத்திரசிகிச்சையை மேற்கொள்கின்றௌம். இது ஒரு மிகச்சிறந்த நரம்பியல்சத்திர சிகிச்சை கட்டமைப்பாகும்.” என்றார்.

இந்த வைத்தியசாலையினால் வருடாந்தம் சராசரியாக 1000 நோயாளர்கள் வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதுடன்இ அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களை விட மிகக்குறைந்த மரண வீதங்களையூம் கொண்டுள்ளது. இந்த சாதனையை கொண்டிருப்பதற்கு மருத்துவ சிகிச்சையில் ஈடுபடும் அணியினரின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன முக்கிய அங்கங்களாக அமைந்துள்ளதுடன்இ பல உயிர்களை பாதுகாத்திடவூம் ஏதுவாக அமைந்துள்ளன.

வைத்தியர் பெரேரா மேலும் குறிப்பிடுகையில்இ “அமெரிக்காவில் காணப்படும் நியமங்களின் பிரகாரம் நாம் காணப்படுகின்றௌம். எமது பெறுபேறுகள் சிறப்பானதாக அமைந்துள்ளன. இங்கு மரணவீதம் 1மூ ஐ விட குறைவாக உள்ளது. எம்மால் மிகவூம் குறைந்த மட்டத்துக்கு குறைக்க முடிந்துள்ளது.” என்றார்.

இந்நிலையத்தினால் வழங்கப்படும் பரிப+ரண சேவைகளில், பெருமளவான சிகிச்சைகள் மற்றும் சூழ்நிலைகள் போன்றன அடங்கியூள்ளன. சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களில் காணப்படும் சிக்கல்கள் நிறைந்த நரம்பியல் நிலைகள் மற்றும் பிரச்சினைகள் போன்றவற்றை இனங்காணும் உயர் நுட்ப முறைகள் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை நம்பியல் சிகிச்சை நிபுணர்கள் வழங்குகின்றனர்.

வைத்தியர் பெரேரா தொடர்ந்து தெரிவிக்கையில்இ “நரம்பியல்சத்திர சிகிச்சையை முன்னெடுப்பதற்கு அவசியமான சகல வசதிகளையூம் வைத்தியசாலை கொண்டுள்ளது. நாம் அனைத்தையூம் முறையாக ஒழுங்குபடுத்தியூள்ளதால் இவை கிடைக்கின்றன. சாதனங்கள்இ நிபுணத்துவம் போன்றவற்றை உயர்ந்த நிலையில் பேணுகின்றௌம்.” என்றார்.

இந்நிலையத்தினால் வழங்கப்படும் பரந்தளவூ சேவைகளில்இ மூளை மற்றும் முள்ளந்தண்டு காய முகாமைத்துவ சேவைஇ பரிப+ரண முதுகு மற்றும் கழுத்து வலி முகாமைத்துவம் - Disc Prolapse மற்றும் Cervical Disc  மாற்றீட்டு சத்திரசிகிச்சைஇ சிதைகின்ற முள்ளந்தண்டு முகாமைத்துவம், Spondylolysthesis க்கு சீராக்கம் மற்றும் இணைப்பு மற்றும் scoliosis இன் சீராக்கம், Trigeminal Neuralgia முகாமைத்துவ சேவைகளான Radiofrequency Ablation (RF), மூளை Hயநஅழசசாயபந முகாமைத்துவ சேவையின் போது Micro Vascular Decompression வழங்கப்படுகின்றதுஇ இழுப்பு முகாமைத்துவ சேவை மற்றும் குழந்தைகளுக்கான மூளை கட்டி அகற்றும் சேவை மற்றும் Pituitary tumours போன்றன அடங்கியூள்ளன.

குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான Hydrocephalus முகாமைத்துவ சேவைக்கு மேலதிகமாகஇ வைத்தியசாலையினால் Cerebral Aneurysm மற்றும் Arteriovenous Malformations (AVM) முகாமைத்துவ சேவைஇ முள்ளந்தண்டு கட்டி முகாமைத்துவ சேவை – Vertebral Intradural மற்றும் Intra Medullary கட்டிகள் போன்றனவூம் வழங்கப்படுகின்றன.

வைத்திய பெரேராவின் மேற்பார்வையின் கீழ் வைத்தியசாலையின் மூளை மற்றும் முள்ளந்தண்டு சிகிச்சை அணியினால் மறுவாழ்வளிக்கும் scoliosis சத்திரசிகிச்சையூம் மேற்கொள்ளப்படுகின்றது. நரம்பியல்சத்திரசிகிச்சை அணியினால் உயர் நுட்பமான மற்றும் ஆபத்து நிறைந்த சத்திரசிகிச்சையை முன்னெடுத்திருந்த முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

"Awake neurosurgery எனும் சத்திரசிகிச்சையையூம் நாம் மேற்கொள்கின்றௌம் - இதன் போதுஇ மூளை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் போது நோயாளர் உணர்வூடன் இருப்பார். பிரிதொரு அணி சிகிச்சையை முன்னெடுக்கும் போதுஇ நோயாளி எம்முடன் உரையாடிஇ பாடிய வண்ணமிருப்பார்” என வைத்தியர் பெரேரா விளக்கமளித்தார்.

வைத்தியசாலையில் வைத்தியர் பெரேராவூக்கு உதவியாக பல்துறைசார் அனுபவம் வாய்ந்த சிகிச்சை அணி காணப்படுகின்றது. இதில் நரம்பியல்சத்திரசிகிச்சை நிபுணர்கள்இ நரம்பியல் மயக்கமருந்தளிப்பவர்கள்இ ஏனைய துணை ஊழியர்கள்இ தாதியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற நுட்பவியலாளர்கள் ஆகியோர் உள்ளனர்.

ஸ்தாபிக்கப்பட்டது முதல் நிலையம் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளதுடன்இ பிரத்தியேகமான நரம்பியல் சத்திரசிகிச்சை பகுதியை கொண்டுள்ளதுடன்இ நோயாளர்களுக்கு 40 அறைகள் காணப்படுகின்றன. பிரத்தியேகமான neurosurgical ICUஇல் 14 பிரத்தியேக அறைகள் காணப்படுவதுடன்இ இவற்றில் நவீன இயந்திர சாதனங்கள் மற்றும் மூன்று தனித்தனி அரங்குகளுடனான நரம்பியல்சத்திர சிகிச்சை அரங்கு தொகுதி மற்றும் பரிப+ரண நரம்பியல் தொகுதி படமெடுக்கக்கூடிய நிலையத்தில் MRI, CT ஸ்கான் மற்றும் அஞ்ஜியோகிராபி வசதிகள் போன்றன காணப்படுகின்றன.

ஆசிரி சென்ரலின் மூளை மற்றும் முள்ளந்தண்டு நிலையம் பலருக்கு மறுவாழ்வளித்துள்ளது. 3 வயது நிரம்பிய ரதீன் டி சில்வா large cerebella கட்டியை கொண்டிருப்பதை இனங்காணப்பட்டது. வைத்தியர் பெரேராவின் தலைமையில்இ இந்த கட்டியை அகற்ற Ventricular peritoneal shuntஉள்ளீட்டு சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுவரின் தந்தை ரஜிந்திர விவரிக்கையில்இ “எனது மகன் தலைவலி கொண்டதுடன்இ தமது நிற்க முடியாத நிலை காணப்பட்டதுடன்இ அவரின் பேச்சும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆசுஐ பரிசோதனை மூலமாக அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர் பெரேரா எமக்கு தெரிவித்தார். எமக்கு பயமாக இருந்ததுஇ ஆனாலும் பலர் எமக்கு நம்பிக்கைய+ட்டினர்.” என்றார்.

தமது மகனை காப்பாற்றிய அனைவருக்கும் ரதீனின் தாயார் தெரிவிக்கையில்இ “உயிராபத்து நிறைந்த நிலை என எமக்கு தெரிவிக்கப்பட்டதுடன்இ எமக்கு பயம் ஏற்பட்டது. நம்பிக்கையிழந்த நிலையில் நாம் இருந்தோம். சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதுடன்இ எனது மகன் தற்போது குணமடைந்துள்ளார். சிகிச்சையின் பின்னர் மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நாள் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்திருந்தது. எமது மகனின் உயிரை காப்பாற்றியமைக்காக வைத்தியர் பெரேரா மற்றும் வைத்தியசாலையின் சகல ஊழியர்களுக்கும் வார்த்தைகளால் நன்றி கூறினால் போதாது. எதிர்பார்த்ததை விட வேகமாக குணமடைந்துவிட்டார்இ புன்னகைத்து விளையாடுகின்றார். இதற்கு காரணமான அனைவருக்கும் இறை ஆசி கிடைக்கட்டும்.” என்றார்.

The specialist medical team The patient with his happy family