Mrpupapd; nra;jpfs;

10 taJ rpWtDf;F jkJ rpfpr;ir %yk; kWtho;T toq;fpAs;s Mrpup %is kw;Wk; KJFjz;L tpNrl rpfpr;ir gphpT

ஜுன் 1ம் திகதி 2016 கொழும்பு: நரம்பியல் கோளாறுகளைக் கண்டறிந்து அதற்கு தகுந் தசிகிச்சையளித்து வரும் ஆசிரி வைத்தியசாலையின்; ‘மூளை மற்றும் முதுகுதண்டு விசேட சிகிச்சை பிரிவூ” இலங்கை மருத்துவ வரலாற்றில் மனதை உருக்கும் ஒரு சிறந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

எம்பிளிபிட்டியவினை பிரதேசத்தினை சேர்ந்த செல்வன். டப்ளியூ.ஏ.டி.எஸ்.கே நெத்மின எனும் 10 வயதேயான நோயாளி கடந்த ஆண்டு புலமைபரிசிலில் சிறந்தபெறுபேறுகளைப் பெற்ற திறமையானமாணவனாவான். தனது மாவட்டத்தில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இவர் தேசிய அளவில் 09ம் இடத்தினை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் உதவித்தொகை பெற்றுக்கொண்டு கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் தனதுகல்வியைதொடரஆவல் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக 2015 ஒக்டோபர் மாதம் மோட்டார் வாகன விபத்தொன்றில் சிக்கிக்கொண்ட இவரது கனவூகள் அனைத்தும் சிதைந்தது. நரம்பியல் கோளாறுகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சிறுவன் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வெளிநாட்டு மருத்துவ உத்திகளைப் பயன்படுத்தி எலும்பு முறிவூ மற்றும் CFS கசிவிற்குமான சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. ஒருவாரத்தின் பின்னர் அவர் வீடு திருபிய போதிலும்இ அவரது பிரச்சினை மேலும் தொடர்ந்ததன் காரணமாகஅவரது பெற்றௌர்கள் அவரை அம்பிலிபிடிய வைத்தியசாலையில்; அனுமதித்தனர்இ நிலமை தொடர்ந்ததனால் அவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு subdural empyema போன்ற பல சத்திரசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அவர் அங்கிருந்து வீடு திரும்பிய போதிலும் அவருக்கு சிறந்த பலன் கிடைக்கவில்லைஇ அவரது மூட்டுக்களும் இயங்கவில்லை.

இவர் ஆசிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்இ ஆசிரி வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய ஆலோசகரான. டாக்டர்.சுனில் பெரேரா மற்றும் அவரது குழுவினரின் வழிகாட்டலுக்கு அமைய சிறுவனுக்கு உடனடி சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆசிரிவைத்தியசாலையின் நரம்பியல் பிரிவினரால் CT ஸ்;கேன் மேற்கொள்ளப்பட்ட போது அவரது தலையின்; முன் பகுதியில் மூளை நீர் மிகைப்பு (hydrocephalous) இருப்பது கண்டறியப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இது நோயாளிக்கு சிறந்த பலனையூம் முன்னேற்றத்தினையூம் கொடுத்துள்ளது. நாட்டிலுள்ள சாதாரண பிரஜைகளைப் போன்றே சிறுவன் நெத்மினவிற்கும் பல மருத்துவ செலவீனங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது ஆயினும் மாணவனின் நிலையை கருத்திற் கொண்டு அவனது பல்வேறு செலவூகளைவைத்தியசாலை தள்ளுபடி செய்து நோயாளியின் குடும்பத்தினருக்கு உதவியூள்ளது.

ஆசிரி வைத்தியசாலையின் Brain and Spain பற்றி

ஆசிரிவைத்தியசாலையின் Brain and Spain மையமானது சர்வதேச தரம் வாய்ந்த உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களையூம் கொண்டுள்ளதுBrain and Spain மையமானதுஇ அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் அடங்கிய இலங்கையின் முதலாவது மையமாகும். எமது மையத்தில் நியூ+ரோ அறுவைக்கான சிறந்து ஆலோசகர்கள்இ நரம்பியல் மருத்துவர்கள்இ விசேட நிபுணத்துவம் வாய்ந்த ஸ்ட்ரோக் மருத்துவர்கள் மற்றும் Interventional Neuro கதிரியக்க வல்லுனர்கள் ஆகியோர் கடமையில் உள்ளமை சிறப்பம்சமாகும். இதன் காரணத்தால் அனைத்து நோயாளர்களுக்கும் பல் அணுகுமுறையூடனான உயர் தரமான மற்றும் உயர் மருத்துவ பாதுகாப்புடன் சிறந்த முழுமையான சிகிச்சைகள் கிடைக்கக்கூடியதாக உள்ளமை விசேட அம்சமாகும்.

ஆசிரிவைத்தியசாலையைப் பற்றி

இலங்கையில் முன்னேற்றகரமான தொழில்நுட்பவசதிகளுடன் கூடிய மருத்துவ வசதிகளுடன் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு சர்வதேச தரத்தில் மருத்துவ சேவைகளை வழங்கி வரும் த சென்ட்ரல் வைத்தியசாலையானதுஇ அண்மையில் ஆசிரி மருத்துவமனை குழுவில் இணைந்து கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கும் 14 மாடிகளைக் கொண்ட த சென்ட்ரல் வைத்தியசாலையானது இல.114இ நொரிஸ் வீதிஇ கொழும்பு 10 எனும் முகவரியில் அமைந்துள்ளது. இவ் வைத்தியசாலையானது நோயறிதல் சோதனைஇ சிகிச்சையளித்தல் மற்றும் தீவிர சிகிச்சை வசதிகள் போன்ற பல்வேறு மருத்துவ வசதிகளை வழங்கி நோயாளர்களை சௌகரியமாக பராமரித்து வருகின்றது. அத்துடன் இங்கு தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைசார் மருத்துவர்கள்இ ஆலோசகர்கள் மற்றும்; நிபுணத்துவம் வாய்ந்த அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் ஆகியோர் சேவை வழங்கிவருகின்றனர். மேலும் இவ்வைத்தியர்களுக்கு துணை புரிவதற்காக ஆற்றல் மிக்க மற்றும் பயிற்சிபெற்ற மருத்துவ அதிகாரிகள் மற்றும் வைத்திய தாதியர்கள் கடமையில் உள்ளனர்.